ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.
Akkang karuti mutalizhakkunj seyvinaiUkkA raRivuTai yAr
Gayathri Prasanna
பொருள் / உரை
முருகா எளிய உரை
எதிர்காலத்தில் பெரும் லாபம் கிடைக்கும் என்ற பேராசையில், இப்போது கையில் பாதுகாப்பாக உள்ள அசல் முதலையே இழக்கச் செய்யும் ஆபத்தான செயல்களை அறிவுடையோர் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
• ஆக்கம் கருதி = எதிர்காலத்தில் வரக்கூடிய கூடுதல் லாபத்தையும் ஆதாயத்தையும் மட்டுமே பேராசையோடு கருதி,• முதல் இழக்கும் = இப்போது கையில் பாதுகாப்பாக இருக்கும் அசல் முதலையே இழக்கச் செய்யும்• செய்வினை = ஆபத்தான அழிவுச் செயல்களை,• அறிவுடையார் = விவேகமுள்ள சான்றோர்கள்• ஊக்கார் = ஒருபோதும் தொடங்கவும் மாட்டார்கள், விரும்பவும் மாட்டார்கள்.
மு.வரதராசன்
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
பரிமேலழகர்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். ('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.)
சாலமன் பாப்பையா
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
Meaning in English
To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain





