Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 462

பொருட்பால்அரசியல்47. தெரிந்துசெயல்வகை

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்.

terinta inattoTu tErnteNNis seyvArkkarumporuL yAtonRu mil

Anirudh K Warrier

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அறிவுடைய பெரியோர்களோடு கலந்து ஆலோசித்து, ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்துபவர்களுக்கு, இந்த உலகில் சாதிக்க முடியாத அரிய செயல் என்று எதுவுமே இல்லை.

• தெரிந்த இனத்தொடு = ஆராய்ந்து தமக்குத் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அறிவுடைய சான்றோர்களுடன் கலந்து ஆலோசித்து,• தேர்ந்து எண்ணி = செய்ய வேண்டிய காரியத்தை நுட்பமாக ஆராய்ந்து தாமும் சிந்தித்து,• செய்வார்க்கு = திட்டமிட்டுச் செயல்படுத்துபவர்களுக்கு,• அரும்பொருள் யாதொன்றும் இல் = அடைவதற்கு அரிய கடினமான காரியம் என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை.

மு.வரதராசன்

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

பரிமேலழகர்

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை. (ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

Meaning in English

With chosen friends deliberate; next use the private thought; Then act By those who thus proceed all works with ease are wrought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout