நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.
nallinatti nUngkun tuNaiyillai tIyinattinallaR paTuppatUu mil
Priya Balaji
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுக்கு நல்லோரின் தூய சேர்க்கையை விடச் சிறந்த உற்ற துணையும் இவ்வுலகில் இல்லை; தீயோரின் கீழ்மைச் சேர்க்கையை விடத் தீராத துன்பத்தைத் தந்து அழிக்கக்கூடிய கொடிய பகையும் வேறு எதுவுமே இல்லை.
• நல்லினத்தின் ஊங்கும் = நல்ல சான்றோர்களின் தூய சேர்க்கையைக் காட்டிலும் மேம்பட்ட• துணை இல்லை = சிறந்த பாதுகாப்பான உதவித் துணை இவ்வுலகில் வேறு எதுவுமில்லை;• தீயினத்தின் = அதேபோல், தீய கீழ்மக்களின் சேர்க்கையைக் காட்டிலும்• அல்லல் படுப்பதூஉம் இல் = ஒரு மனிதனுக்குத் தீராத கொடும் துன்பங்களைத் தந்து அழிக்கக்கூடிய கொடிய பகை வேறு எதுவுமே இல்லை.
Murugaa simple commentary
For a human being, there is no better true companion in this world than the pure company of good people; there is no other cruel enemy that can inflict unending suffering and destroy them than the base company of evil people.
• Superior to good company = Superior to the pure association of good and noble people• There is no companion = there is no other excellent, protective helpful companion in this world;• Than evil company = Likewise, than the association with evil, base people• There is nothing that causes sorrow = there is no other cruel enemy that can inflict unending severe sorrows upon a human being and destroy them.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
பரிமேலழகர்
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)
Parimelazhagar
There is no aid greater than good company, for a person there is no aid greater than good company, and there is nothing that causes distress (more) than bad company, there is no enemy greater than bad company. (The fifth case markers came in the sense of comparison. The word 'more' was also added to the latter part and explained by transposing the conjunction. Because good company removes one from ignorance and protects one from suffering grief, he called it 'aid', and because bad company removes one from wisdom and causes one to suffer grief, he called it 'enemy'. 'That which causes distress' is a causal noun. By this, the affirmative and negative injunctions were stated together.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
Meaning in English
Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe

