மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து.
mananalatti nAkum maRumaimaR Raஃtuminanalatti nEmAp puTaittu
Shruthi Attringal
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுக்கு மனத்தின் நன்மையால் மறுமை இன்பமாகிய மோட்சம் கைகூடும்; அந்த உன்னதமான மோட்ச இன்பமும் கூட, அவன் சேர்ந்திருக்கின்ற நல்லோரின் தூய சேர்க்கையினால் மேலும் வலிமை பெற்று நிலைபெறும்.
• மன நலத்தின் ஆகும் = ஒரு மனிதனுக்கு உள்ளத்தின் தூய்மையினால் மோட்சமாகிய• மறுமை = மறுமை இன்பம் உண்டாகும்;• மற்று அஃதும் = ஆனால் அந்த மறுமைப் பேரின்பம் கூட,• இன நலத்தின் = தூய்மையான நல்ல சான்றோர்களோடு சேர்ந்திருக்கின்ற இன நலத்தினால்• ஏமாப்பு உடைத்து = மேலும் அசைக்க முடியாத வலிமையையும் பாதுகாப்பையும் பெறும்.
Murugaa simple commentary
For a human being, through the goodness of the mind, salvation which is the bliss of the afterlife will be attained; even that sublime bliss of salvation, through the pure association of the good people with whom he is joined, will gain further strength and endure.
• Through goodness of mind comes = For a person, through the purity of heart, the salvation which is• Afterlife = bliss of the afterlife will arise;• And even that = But even that supreme bliss of the afterlife,• Through goodness of company = through the goodness of company of being associated with pure, good, virtuous people• Possesses protection = will further gain unshakeable strength and protection.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
பரிமேலழகர்
மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)
Parimelazhagar
Through goodness of mind, the next birth comes about, for a person, happiness in the next birth arises solely from goodness of mind; yet that possesses security through goodness of company, for that, even that excellence itself possesses the gaining of strength through goodness of company, (Saying that the next birth comes about through goodness of mind is stated by agreeing with the doctrine that what yields it is goodness of mind itself, and nothing else. Matru is a particle denoting a change of action. The particle um is an elliptical conjunction embracing what has preceded. It is stated how it makes it stand firm, saying that even if occasionally goodness of mind changes due to the quality of tamas, good company keeps it steady in agreement and causes it to yield the next birth. Know that through these five verses the excellence of not joining petty company is stated by way of the opposite, which is joining good company.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
Meaning in English
Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong

