மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து.
mananalam nankuTaiya rAyinunj sAnROrkkinanalam EmAp puTaittu
Afina Arul
பொருள் / உரை
முருகா எளிய உரை
இயற்கையிலேயே தூய மனநலம் பெற்ற சான்றோராகவே இருந்தாலும் கூட, அவர்கள் சேர்ந்திருக்கின்ற நல்லோரின் தூய சேர்க்கையே அவர்களுக்கு மேலும் பலமான பாதுகாப்புக் கவசமாக அமையும்.
• மன நலம் = உள்ளத்தின் தூய்மையையும் நற்குணங்களையும்• நன்கு உடையர் ஆயினும் = இயல்பாகவே மிகச் சிறப்பாகப் பெற்றவர்களாக இருந்த போதிலும்,• சான்றோர்க்கு = அந்த ஒழுக்கச் சான்றோர்களுக்கும் கூட,• இன நலம் = நல்ல சான்றோர்களோடு சேர்ந்திருக்கின்ற தூய சேர்க்கையானது,• ஏமாப்பு உடைத்து = வாழ்வை அசைக்க முடியாதபடி காத்து நிற்கும் சிறந்த பாதுகாப்புக் கவசமாகும்.
மு.வரதராசன்
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
பரிமேலழகர்
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
Meaning in English
To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong





