Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 456

பொருட்பால்அரசியல்46. சிற்றினஞ்சேராமை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை.

manantUyArk kessanan RAkum inantUyArkkillainan RAkA vinai

Bhuvanashri

பொருள் / உரை

முருகா எளிய உரை

தூய மனம் கொண்டவர்களுக்கு அவர்கள் விட்டுச் செல்லும் நற்புகழும் சந்ததியும் நன்மையாக விளங்கும்; தூய்மையான நல்லோரின் சேர்க்கை உடையவர்களுக்கு அவர்கள் செய்யும் எந்தச் செயலும் நன்மையாகவே முடியும்.

• மனம் தூயார்க்கு = தூய்மையான உள்ளம் உடையவர்களுக்கு• எச்சம் நன்று ஆகும் = அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கும் நற்புகழும் சந்ததியும் நன்மையாகவே அமையும்;• இனம் தூயார்க்கு = தூய்மையான நல்ல நண்பர்களின் கூட்டத்தோடு சேர்ந்திருப்பவர்களுக்கு• நன்று ஆகா வினை இல்லை = நன்மையாக முடியாமல் தீமையாய் முடியும் செயல் என்று எதுவுமே இல்லை (அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் நன்மையாகவே முடியும்).

மு.வரதராசன்

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

பரிமேலழகர்

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

Meaning in English

From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout