மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு.
manattu LatupOlak kATTi oruvaRkinattuLa tAkum aRivu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனது கூரிய அறிவும் சிந்தனையும் அவனது சொந்த மனத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அவன் சார்ந்திருக்கின்ற நண்பர்களின் கூட்டத்திற்குள்ளிருந்தே அந்த அறிவு உருவாகி வெளிப்படுகிறது.
• ஒருவற்கு = ஒரு மனிதனுக்கு• அறிவு = அவனது தனிப்பட்ட நுட்பமான அறிவு மற்றும் குணம்,• மனத்து உளது போலக் காட்டி = அவனது சொந்த மனத்திற்குள்ளேயே தானாக இருப்பது போலத் தோன்றினாலும்,• இனத்து உளதாகும் = உண்மையில் அவன் பழகுகின்ற நண்பர்களின் கூட்டத்திற்குள் உள்ளதே அவனது அறிவாக உருவெடுக்கிறது.
மு.வரதராசன்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
பரிமேலழகர்
அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் . (மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு் புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
Meaning in English
Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find





