பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.
pallAr pakaikoLaliR pattaTutta tImaittEnallAr toTarkai viTal
Malathi Anton
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்ல குணங்களும் ஞானமும் உடைய பெரியோரின் நட்பைக் கைவிட்டு ஒதுக்குவது என்பது, பலரோடு தனியனாக நின்று பகைமை கொள்வதை விடப் பத்து மடங்கு கொடிய பேரழிவை உண்டாக்கும் செயலாகும்.
• நல்லார் தொடர் கைவிடல் = அறமும் ஞானமும் நிறைந்த நல்ல பெரியோர்களின் தொடர்பையும் நட்பையும் இழந்து கைவிடுவது என்பது,• பல்லார் பகை கொளலின் = தனியொருவனாக நின்று பல கொடிய மனிதர்களோடு பகைமை கொள்வதை விடவும்,• பத்து அடுத்த தீமைத்தே = பத்து மடங்கு கொடிய பேரழிவைத் தரக்கூடிய பெருந்தீமையாகும்.
மு.வரதராசன்
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
பரிமேலழகர்
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல். (பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
Meaning in English
Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to forego





