இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
iTippArai illAta EmarA mannankeTuppA rilAnung keTum
Krishaang
பொருள் / உரை
முருகா எளிய உரை
தவறு செய்யும் போது கண்டித்து நல்வழி காட்டும் பெரியோர்களின் வழிகாட்டல் இல்லாத பாதுகாப்பற்ற தலைவன், அவனைக் கெடுப்பதற்குப் பகைவர்கள் எவரும் இல்லாவிட்டாலும் கூடத் தன் சொந்த தவறான முடிவுகளாலேயே தானாக அழிந்துவிடுவான்.
• இடிப்பாரை இல்லாத = தவறு செய்யும் போது கடிந்து கூறி நல்வழி காட்டும் பெரியோர்களைத் துணையாகக் கொள்ளாத,• ஏமரா மன்னன் = பாதுகாப்புக் காவலற்ற ஒரு தலைவன்,• கெடுப்பார் இலானும் = அவனை அழிக்கக்கூடிய வெளிப் பகைவர்கள் எவருமே இல்லாதிருந்தாலும் கூட,• கெடும் = தன் சொந்தத் தவறுகளாலேயே தானாக அழிந்து போவான்.
மு.வரதராசன்
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
பரிமேலழகர்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)
சாலமன் பாப்பையா
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
Meaning in English
The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall





