தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.
tammiR periyAr tamarA ozhukutalvanmaiyu LellAn talai
Praniti
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவிலும் பண்பிலும் தம்மைக் காட்டிலும் உயர்ந்த பெரியோர்களைத் தமக்குரிய துணையாகக் கொண்டு, அவர்கள் வழியில் பணிவோடு நடப்பது, ஒரு தலைவனுக்குரிய எல்லா வகை வலிமைகளிலும் தலையாய சிறந்த வலிமையாகும்.
• தம்மின் பெரியார் = அறிவு, அனுபவம், நற்பண்புகளால் தம்மைக் காட்டிலும் மேம்பட்ட பெரியோர்கள்• தமரா ஒழுகுதல் = தமக்கு மிகவும் நெருங்கிய உற்ற துணையாகுமாறு அவர்களது வழிகாட்டுதலின்படி பணிவோடு நடந்து கொள்ளுதல்,• வன்மையுள் எல்லாம் = மனிதன் பெற்றிருக்கக்கூடிய படை பலம், பண பலம் போன்ற வலிமைகள் எல்லாவற்றிலும்• தலை = தலையாய முதன்மையான வலிமையாகும்.
மு.வரதராசன்
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
பரிமேலழகர்
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)
சாலமன் பாப்பையா
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
Meaning in English
To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells





