Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 441

பொருட்பால்அரசியல்45. பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.

aRanaRintu mUtta aRivuTaiyAr kENmaitiRanaRintu tErntu koLal

A. K. Ramesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறியின் நுட்பங்களை உணர்ந்து அறிவாலும் அனுபவத்தாலும் முதிர்ந்த பெரியோர்களின் நட்பின் அருமையை ஆராய்ந்து, அவர்களைப் பணிந்து மதித்து அவர்தம் துணையைத் தனக்குரிய பக்கபலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

• அறன் அறிந்து = அறநெறிகளின் நுட்பமான உண்மைகளை உணர்ந்து,• மூத்த அறிவுடையார் = அறிவாலும் அனுபவத்தாலும் ஒழுக்கத்தாலும் முதிர்ந்த பெரியோர்களுடைய• கேண்மை = அரிய நட்பினுடைய மேன்மையை,• தேர்ந்து = நன்றாக ஆராய்ந்துணர்ந்து,• திறன் அறிந்து கொளல் = அவர்களை மதித்துப் போற்றி அவர்தம் நட்பைப் பெறும் வகை அறிந்து ஏற்றுத் துணையாகக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)

சாலமன் பாப்பையா

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

Meaning in English

As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout