பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
pazhiyanjsip pAttUN uTaittAyin vAzhkkaivazhiyenjsal enjnjAnRum ila
Mano
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழிக்கு அஞ்சிப் பொருள்சேர்ப்பவன் என்றும்!பிறர்க்கும் பகிர்ந்துண்பான் பண்புடன் என்றும்!வழிதான் எஞ்ஞான்றும் அழியாது ஓங்கும்!தலைமுறையின் தோறும் தழைத்தே ஓங்கும்!
• பழி அஞ்சி = பாவச் செயல்களுக்கும் உலகப் பழிக்கும் அஞ்சி நேர்மையாகப் பொருள் சேர்த்து,• பாத்து ஊண் = அப்பொருளைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதை• வாழ்க்கை உடைத்தாயின் = ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையின் பண்பாகக் கொண்டிருந்தால்,• வழி = அவனது சந்ததியானது (வம்சம்)• எஞ்ஞான்றும் = எக்காலத்திலும்• எஞ்சல் இல் = அழியாமல் நிலைத்து நின்று தழைத்தோங்கும்.
மு.வரதராசன்
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
பரிமேலழகர்
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
Meaning in English
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs





