தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
tenpulattAr teyvam viruntokkal tAnenRAngkuaimpulattA ROmpal talai
Bhanumathy Shankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
மறைந்த முன்னோர் தெய்வம் விருந்தினர் என்றும்!சுற்றமும் தானும் சேர்ந்திடும் ஐவர்க்கும் என்றும்!ஐவர்க்கும் காப்பதே தலையாய அறமே!இல்வாழ்வான் செயலே தலையாய அறமே!
• தென்புலத்தார் = மறைந்துபோன முன்னோர்கள்,• தெய்வம் = பரம்பொருள் (தெய்வம்),• விருந்து = இல்லம் தேடி வரும் விருந்தினர்,• ஒக்கல் = தன் உற்றார் உறவினர்கள் (சுற்றத்தார்),• தான் = இல்லறம் நடத்தும் தான் மற்றும் தன் குடும்பம்• என்றாங்கு = என்று சொல்லப்பட்ட• ஐம்புலத்து ஆறு ஓம்பல் = இந்த ஐந்து தரப்பினருக்கும் செய்ய வேண்டிய அறக் கடமைகளை வழுவாது போற்றுவதே• தலை = இல்லறத்தானுக்குரிய தலையாய அறமாகும்.
Murugaa simple commentary
Departed ancestors, deity, guests always!Always for the five who include relatives and oneself!Protecting the five is indeed the foremost virtue!The deed of the householder is indeed the foremost virtue!
• Thenpulathar = departed ancestors,• Deivam = Supreme Being (deity),• Virundhu = guests who come seeking the home,• Okkal = one's kinsfolk (relatives),• Thaan = oneself running the household and one's family• Enraangu = that are said to be• Aimpulathu aaru oombal = cherishing without fail the righteous duties to be performed for these five groups• Thalai = is the foremost virtue belonging to a householder.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
பரிமேலழகர்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)
Parimelazhagar
Tenpulattar teyvam viruntu okkal tan enru, those spoken of as the Pitrs, the Devas, guests, kinsfolk, and oneself; aim pulattu aru ompal talai, performing without fail the path of virtue to be done in these five places is the preeminent virtue for a householder. (The Pitrs are a class of divine beings created by Ayan at the time of creation; because their abode is the southern direction, he called them 'tenpulattar'. 'Teyvam' is a singular denoting a class. 'Viruntu' means newness; here by metonymy it stands for those who have come as newcomers; they are of two kinds: those who come purposefully because of former acquaintance, and those who come without such purpose because of the absence of it. Okkal: kinsfolk. Since all virtues must be performed while one remains in existence oneself, cherishing oneself also became a virtue. 'Enra underwent modification'. 'Anku' is an expletive. Because all five are places for performing virtue, he called them 'aimpulam'. Know that the tax due to the king became one sixth because five shares are needed for these five places.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
Meaning in English
The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity

