Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 42

அறத்துப்பால்இல்லறவியல்5. இல்வாழ்க்கை

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்என்பான் துணை.

tuRantArkkum tuvvA tavarkkum iRantArkkumilvAzhvAn enpAn tuNai

Gangai Amaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

பற்றுவிட்ட துறவியர்க்குத் துணை!உணவின்றி வாடும் ஏழைக்குத் துணை!ஆதரவின்றி மறைந்தோர்க்கும் துணை!இல்லறத் தலைவனே என்றும் துணை!

• துறந்தார்க்கும் = உலகப் பற்றுக்களைத் துறந்த துறவியர்க்கும்,• துவ்வாதவர்க்கும் = உணவின்றி வறுமையில் வாடும் எளிய ஏழைகளுக்கும்,• இறந்தார்க்கும் = ஆதரவின்றித் திக்கற்று இறந்துபோனவர்களுக்கும்• இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் வாழும் குடும்பத் தலைவனே• துணை = உற்ற துணையாக நின்று காப்பவனாவான்.

மு.வரதராசன்

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பரிமேலழகர்

துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்

Meaning in English

To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout