Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 439

பொருட்பால்அரசியல்44. குற்றங்கடிதல்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.

viyavaRka enjnjAnRun tannai nayavaRkananRi payavA vinai

Jayasree Girish

பொருள் / உரை

முருகா எளிய உரை

எந்தக் காலத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணித் தற்பெருமை பேசிக் கொள்ளக் கூடாது; அதேபோல், தனக்கும் உலகத்திற்கும் நன்மை தராத பயனற்ற அல்லது தீய செயல்களை மனதாலும் விரும்பக் கூடாது.

• எஞ்ஞான்றும் = எவ்வளவு பெரிய வெற்றி அல்லது உயர்வை அடைந்த காலத்திலும் கூட,• தன்னை வியவற்க = 'என்னை விடச் சிறந்தவர் எவருமில்லை' என்று அகங்காரத்தோடு தன்னைத் தானே புகழ்ந்து மெச்சிக்கொள்ளக் கூடாது;• நன்றி பயவா வினை = தமக்கும் உலகிற்கும் அறமும் நன்மையும் தராத தீய காரியங்களை• நயவற்க = மனதால் கூட ஒருபோதும் விரும்பிச் செய்யக் கூடாது.

மு.வரதராசன்

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

பரிமேலழகர்

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக. (தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் , அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

Meaning in English

Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of good

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout