Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 438

பொருட்பால்அரசியல்44. குற்றங்கடிதல்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.

paRRuLLa mennum ivaRanmai eRRuLLumeNNap paTuvaton RanRu

Vilvapathi

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொருளின் மீது அளவற்ற பற்றுக் கொண்டு எவருக்கும் எதையும் கொடுக்காத கஞ்சத்தனம் என்பது, மனிதன் செய்யக்கூடிய பிற குற்றங்களோடு ஒன்றாகச் சேர்த்து எண்ண முடியாத அளவுக்கு மிகக் கொடிய தனிப்பெரும் குற்றமாகும்.

• பற்றுள்ளம் என்னும் = பணத்தின் மீது அளவுக்கு மீறிய பற்று வைத்துப் பூட்டி வைக்கின்ற• இவறன்மை = 'கஞ்சத்தனம்' என்னும் கொடுங்குணமானது,• எற்றுள்ளும் = மனிதன் செய்யக்கூடிய பிற குற்றங்கள் எல்லாவற்றோடும் சேர்த்து• எண்ணப்படுவது ஒன்று அன்று = சமமாக எண்ணக்கூடிய சாதாரணக் குற்றம் அல்ல; அது எல்லாக் குற்றங்களையும் விடத் தனிப்பெரும் கொடிய குற்றமாகும்.

மு.வரதராசன்

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

பரிமேலழகர்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது

சாலமன் பாப்பையா

செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

Meaning in English

The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout