Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 436

பொருட்பால்அரசியல்44. குற்றங்கடிதல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.

tankuRRa nIkkip piRarkuRRang kANkiRpinenkuRRa mAkum iRaikku

Apoorva

பொருள் / உரை

முருகா எளிய உரை

முதலில் தன்னிடம் உள்ள தவறுகளைக் கண்டு அவற்றை நீக்கிக் கொண்டு, அதன் பிறகு மற்றவர்களது தவறுகளை ஆராய்ந்து திருத்தும் தலைவனுக்கு எக்காலத்திலும் எந்தக் குற்றமும் பழியும் உண்டாகாது.

• தன் குற்றம் நீக்கி = முதலில் தன்னிடம் உள்ள குறைபாடுகளையும் தவறுகளையும் உணர்ந்து அவற்றை அடியோடு நீக்கிவிட்டு,• பிறர் குற்றம் காண்கிற்பின் = அதன் பிறகு மற்றவர்களின் குற்றங்களை நடுநிலையோடு ஆராய்ந்து சரிசெய்யும் ஆற்றல் பெற்றிருந்தால்,• இறைக்கு = அத்தகைய தலைமைப் பண்புடைய தலைவனுக்கு• ஆகும் குற்றம் என் = வரக்கூடிய குறைபாடு அல்லது பழி என்ன இருக்கிறது? (எந்தக் குற்றமும் ஒருபோதும் வராது).

மு.வரதராசன்

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

பரிமேலழகர்

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.)

சாலமன் பாப்பையா

முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

Meaning in English

Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout