குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை.
kuRRamE kAkka poruLAkak kuRRamEaRRan tarUum pakai
Janani Rajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனிதனுக்கு இறுதி அழிவை உண்டாக்குவது அவனது சொந்தக் குற்றங்களே ஆகும்; எனவே, தன் வாழ்க்கையில் எந்தவொரு தவறும் குற்றமும் வராமல் தன்னைக் காத்துக் கொள்வதையே தலையாய கடமையாகக் கொண்டு ஒருவன் வாழ வேண்டும்.
• குற்றமே = ஒருவன் செய்கின்ற தவறுகளும் ஒழுக்கக் குறைபாடுகளுமே• அற்றம் தரூஉம் பகை = அவனுக்கு முழுமையான அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும் கொடிய உள்பகையாகும்;• குற்றமே காக்க பொருளாக = ஆகையால், தன் வாழ்க்கையில் எந்தக் குற்றமும் நேராதவாறு விழிப்புடன் காத்துக் கொள்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.
மு.வரதராசன்
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும். (இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.)
சாலமன் பாப்பையா
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
Meaning in English
Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmity





