செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.
serukkunj sinamunj siRumaiyum illArperukkam perumita nIrttu
Jathavi Shanmuganantham
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆணவச் செருக்கு, கட்டுக்கடங்காத கோபம், இழிவான சிற்றின்ப ஆசை ஆகிய மூன்று குற்றங்களும் இல்லாத ஆட்சியாளரின் செல்வமும் வளர்ச்சியும் எல்லாராலும் மதிக்கப்படும் உன்னதமான மேன்மையை உடையதாகும்.
• செருக்கும் = செல்வத்தாலும் பதவியாலும் வரும் 'ஆணவச் செருக்கு',• சினமும் = நிதானமிழந்த 'பெருங்கோபம்',• சிறுமையும் = இழிவான சிற்றின்ப ஆசையாகிய 'காமச் சிறுமை'• இல்லார் = ஆகிய இம்மூன்று குற்றங்களும் இல்லாத தலைவர்களின்• பெருக்கம் = செல்வாக்கும் அதிகாரமும் நாட்டின் வளர்ச்சியும்,• பெருமித நீர்த்து = அனைவராலும் போற்றத்தக்க உன்னதமான பெருமைமிக்க தன்மையுடையதாகும்.
மு.வரதராசன்
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
பரிமேலழகர்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
Meaning in English
Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain





