அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.
aRivuTaiyAr Ava taRivAr aRivilAraஃtaRi kallA tavar
Yugendran Vasudevan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவுடைய சான்றோர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே உணர்ந்து திட்டமிடும் தொலைநோக்கு உடையவர்கள்; ஆனால் அறிவில்லாதவர்கள் அத்தகைய தொலைநோக்குப் பார்வை இல்லாமல் துன்பம் வந்த பின்பே திகைத்து நிற்பவர்கள் ஆவார்கள்.
• அறிவுடையார் = சிறந்த நுண்ணறிவும் விவேகமும் உடைய சான்றோர்கள்,• ஆவது அறிவார் = எதிர்காலத்தில் நிகழப்போகும் விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்து அறியும் தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் ஆவர்;• அறிவிலார் = ஆனால் அறிவில்லாத மூடர்,• அஃது அறிகல்லாதவர் = எதிர்காலத்தில் வரப்போகும் விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன் இல்லாதவர்கள் ஆவர்.
மு.வரதராசன்
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
பரிமேலழகர்
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
Meaning in English
The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be





