Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 422

பொருட்பால்அரசியல்43. அறிவுடைமை

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.

senRa iTattAR selaviTA tItorIinanRinpA luyppa taRivu

Dr. Saranya Jaikumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனம் விரும்பும் தீய வழிகளிலெல்லாம் அதைப் போக விடாமல் தடுத்து நிறுத்தி, தீமைகளிலிருந்து மனதை விலக்கி, நன்மை தரும் நல்வழியில் அதை வழிநடத்திச் செலுத்துவதே உண்மையான அறிவாகும்.

• சென்ற இடத்தால் செலவிடாது = மனம் ஆசைப்பட்டுத் திரிகின்ற புலன் இன்ப வழிகளிலெல்லாம் அதை அலைபாய விடாமல் தடுத்து நிறுத்தி,• தீது ஒரீஇ = கேடு விளைவிக்கும் தீய வழிகளிலிருந்து மனதை முழுமையாக விலக்கி,• நன்றின்பால் உய்ப்பது = நன்மை தரக்கூடிய நல்வழியில் அதைச் செலுத்துவதே• அறிவு = உண்மையான அறிவுடைமை ஆகும்.

மு.வரதராசன்

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

பரிமேலழகர்

சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)

சாலமன் பாப்பையா

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

Meaning in English

Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout