Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 415

பொருட்பால்அரசியல்42. கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

izhukka luTaiyuzhi URRukkO laRREozhukka muTaiyArvAys sol

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பவருக்கு ஊன்றுகோல் கீழே விழாமல் தாங்குவது போல, ஒழுக்க நெறி தவறாத சான்றோர்களின் வாயிலிருந்து பிறக்கும் நல்வார்த்தைகள், மனிதன் வாழ்க்கையில் தவறி விழுந்துவிடாமல் ஊன்றுகோல் போல் தாங்கி நின்று காக்கும்.

• இழுக்கல் உடை உழி = வழுக்கி விழக்கூடிய வழுக்கலான சேற்று நிலத்தில் நடக்கும் போது• ஊற்றுக்கோல் அற்று = மனிதனைக் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோலைப் போன்றதே• ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் = நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த சான்றோர்களின் திருவாயிலிருந்து வெளிவரும் நல்லறிவுச் சொற்கள் ஆகும்.

மு.வரதராசன்

ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

பரிமேலழகர்

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்''வாய்'என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.)

சாலமன் பாப்பையா

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

Meaning in English

Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout