செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.
sevikkuNa villAta pOzhtu siRituvayiRRukkum Iyap paTum
Shoba Chandrasekhar
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றோர்களின் நல்லறிவு உரைகளைக் கேட்டு மகிழும் செவிக்குரிய அறிவு உணவு கிடைக்காத ஓய்வு நேரங்களிலேயே, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக வயிற்றுக்குச் சிறிதளவு உணவு தரப்படும்.
• செவிக்கு உணவு இல்லாத போழ்து = சான்றோர்களின் அரிய உபதேசங்களைக் கேட்கும் 'செவிக்குரிய அறிவு உணவு' கிடைக்காத இடைவேளை நேரங்களில்,• வயிற்றுக்கும் = இந்த உடலைத் தாங்கி உயிரைக் காப்பதற்காக• சிறிது ஈயப்படும் = வயிற்றுக்கும் சிறிதளவு பருப்பொருள் உணவு வழங்கப்படும்.
மு.வரதராசன்
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
பரிமேலழகர்
செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
Meaning in English
When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need





