Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 400

பொருட்பால்அரசியல்40. கல்வி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.

kETil vizhus selvang kalvi yoruvaRkumATalla maRRai yavai

Kanmani Madhanraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதனுக்கு எவராலும் அழிக்க முடியாத ஒப்பற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; மற்றைய பொன்னும் பொருளும் போன்ற அழியக்கூடிய உலகப் பொருட்கள் உண்மையான செல்வங்கள் ஆகாது.

• ஒருவற்கு = ஒரு மனிதனுக்கு• கேடு இல் = திருடர்களாலும் வெள்ளம் நெருப்பினாலும் எக்காலத்தும் அழியாத• விழுச் செல்வம் = தலைசிறந்த ஒப்பற்ற பெருஞ்செல்வம் எதுவென்றால் அது• கல்வி = அவனது உள்ளத்தில் நிறைந்திருக்கும் கல்வியே ஆகும்;• மற்றையவை = கல்வி அல்லாமல் பிற புறப்பொருட்களான பொன்னும் நிலமும் பொருளும்• மாடு அல்ல = உண்மையான அழியாத செல்வங்கள் ஆகாது.

மு.வரதராசன்

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

பரிமேலழகர்

ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல. (அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

Meaning in English

Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout