Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 399

பொருட்பால்அரசியல்40. கல்வி

தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.

tAmin puRuva tulakin puRakkaNTukAmuRuvar kaRRaRin tAr

Nithinraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

தமக்கு இன்பம் தரும் கல்வி அறிவினால் உலகத்து மக்களும் நன்மை பெற்று மகிழ்வதைக் கண்டு, கற்றறிந்த சான்றோர்கள் மேன்மேலும் பல நல்ல நூல்களை வாழ்நாள் முழுவதும் ஆர்வத்தோடு விரும்பிப் படிப்பார்கள்.

• தாம் இன்புறுவது = தன் மனத்திற்கு எல்லையற்ற இன்பத்தை அளிக்கின்ற கல்வியினால்,• உலகு இன்புறக் கண்டு = உலகத்து மக்கள் அனைவரும் நல்வழியும் மனமகிழ்ச்சியும் பெற்று இன்புறுவதைக் கண்டு உணர்ந்து,• கற்றறிந்தார் = மெய்ஞ்ஞானம் கற்றறிந்த சான்றோர்கள்• காமுறுவர் = மேன்மேலும் புதிய கலைகளையும் நூல்களையும் வாழ்நாள் முழுவதும் ஆவலோடு விரும்பிப் படிப்பார்கள்.

மு.வரதராசன்

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

பரிமேலழகர்

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர். (தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

Meaning in English

Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout