Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 398

பொருட்பால்அரசியல்40. கல்வி

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.

orumaikkaN tAnnaRRa kalvi oruvaRkezhumaiyum EmAp puTaittu

Janhavi Balasubramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதன் தான் எடுத்த இந்த ஒரு பிறவியில் கற்கும் நல்லறிவு மற்றும் கல்வி, அப்பிறப்போடு அழியாமல் அவனது ஆன்மாவைப் பின் தொடர்ந்து சென்று, எழும் ஏழு பிறவிகளிலும் அவனுக்குப் பாதுகாப்புக் கவசமாய் நின்று நல்வழி காட்டும்.

• ஒருமைக்கண் = ஒருவன் தான் வாழ்கின்ற இந்த ஒரு பிறவியில்• தான் கற்ற கல்வி = ஆழமாகக் கற்றுக் கொள்கின்ற நல்லறிவு மற்றும் கல்வி,• ஒருவற்கு = அவனுக்கு அப்பிறவியோடு முடிந்துவிடாமல்• எழுமையும் = அவனது ஆன்மா தொடரும் ஏழு பிறவிகளிலும் (ஏழு தலைமுறைகளிலும்)• ஏமாப்பு உடைத்து = கூடவே சென்று அழியாத பாதுகாப்புக் கவசமாய் நின்று உதவும் சிறப்புடையதாகும்.

மு.வரதராசன்

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

பரிமேலழகர்

ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)

சாலமன் பாப்பையா

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

Meaning in English

The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout