யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.
yAtAnum TATAmAl UrAmAl ennoruvansAntuNaiyung kallAta vARu
Deepika & Aparna
பொருள் / உரை
முருகா எளிய உரை
கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும், எந்த ஊரும் சொந்த ஊராகிப் புகழையும் மதிப்பையும் தரும்; அப்படியிருக்க, ஒரு மனிதன் தான் இறக்கும் வரையிலும் கல்வி கற்காமல் காலத்தை வீணடிப்பது ஏனோ?
• யாதானும் நாடு ஆம் = கல்வி கற்றவனுக்குத் தன் சொந்த நாடு மட்டுமல்லாமல் அந்நிய நாடுகள் எவையும் தன் சொந்த நாடாக மாறும்;• ஊர் ஆம் = அந்நிய ஊர்கள் எவையும் அவனுக்குத் தன் சொந்த ஊராக மாறி மரியாதை தரும்;• என் = அப்படியிருக்க,• ஒருவன் = ஒரு மனிதன்• சாம் துணையும் = தான் சாகும் காலம் வரையிலும் கூட• கல்லாதவாறு = கல்வி கற்காமல் அறியாமையிலேயே காலத்தைக் கழிப்பது ஏன்?
மு.வரதராசன்
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
பரிமேலழகர்
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி? (உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
Meaning in English
The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam





