Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 40

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.

seyaRpAla tOrum aRanE oruvaRkuuyaRpAla tOrum pazhi

Kalpana Raghavendar

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாம் செய்யவேண்டியது அறம் மட்டுமே!நன்மை தரும் அறச்செயல்கள் மட்டுமே!அஞ்சி விலகுவது பழி மட்டுமே!உலகம் பழிக்கும் செயல்கள் மட்டுமே!

• ஒருவற்கு = ஒரு மனிதன் தன் வாழ்நாளில்• செயற்பாலது = விரும்பிச் செய்ய வேண்டியது• அறனே = நன்மையான அறச் செயல்களே ஆகும்;• உயற்பாலது = அஞ்சி விலகிச் செய்யாமல் விட வேண்டியது• பழியே = உலகத்தாரால் பழிக்கப்படும் தீய பாவச் செயல்களே ஆகும்.

மு.வரதராசன்

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

பரிமேலழகர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

சாலமன் பாப்பையா

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Meaning in English

'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout