Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 39

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல.

aRattAn varuvatE inpamaR RellAmpuRatta pukazhum ila

Thushitha Kiruthika

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறவழி வருவதே இன்பமாகும்!அதுவே உண்மையான பேரின்பமாகும்!குறுக்கு வழியில் தான் இன்பம் தராதே!குறுக்கு வழியில் புகழும் தராதே!

• அறத்தான் வருவதே = நேர்மையான அறநெறியில் நின்று பெறுவதே• இன்பம் = உண்மையான மன அமைதியும் நிலைத்த பேரின்பமும் ஆகும்;• மற்று எல்லாம் = அறவழியில் அல்லாமல் தவறான குறுக்கு வழிகளில் வருவன எல்லாம்• புறத்த = இன்பம் இல்லாத துன்பங்களே ஆகும்;• புகழும் இல = அவை மனிதனுக்கு நற்புகழையும் பெற்றுத் தராது.

மு.வரதராசன்

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பரிமேலழகர்

அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

Meaning in English

What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout