செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
sevikaippas soRpoRukkum paNpuTai vEntankavikaikkIzht tangku mulaku
Kirthika Karthik
பொருள் / உரை
முருகா எளிய உரை
தவறுகளைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் அறிஞர்களின் கசப்பான சொற்களையும் பொறுமையோடு கேட்கும் பண்புடைய நல்லரசரின் ஆட்சிக் குடையின் கீழ், இந்த உலகமே விரும்பித் தஞ்சம் புகுந்து வாழும்.
• செவி கைப்ப = கேட்கும் போது காதுகளில் வேப்பங்காய் போலக் கசக்கும்படியான• சொல் பொறுக்கும் = அறிவுரைகளையும் குறைசுட்டிக் காட்டும் இடிந்துரைக்கும் சொற்களையும் பொறுமையோடு கேட்கின்ற• பண்புடை வேந்தன் = நற்பண்பு கொண்ட மன்னனுடைய• கவிகைக் கீழ்த் தங்கும் = வெண்கொற்றக் குடையின் நிழலின் கீழாக• உலகு = இந்த உலகத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தஞ்சம் புகுந்து தங்குவர்.
மு.வரதராசன்
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
பரிமேலழகர்
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
Meaning in English
The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure





