Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 388

பொருட்பால்அரசியல்39. இறைமாட்சி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.

muRaiseytu kAppARRum mannavan makkaTkiRaiyenRu vaikkap paTum

Kumuthini

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவருக்கும் பாரபட்சமின்றி நடுநிலையோடு நீதி வழங்கி, தன் குடிமக்களைத் துன்பங்கள் அணுகாமல் காப்பாற்றும் நல்லாட்சியாளன், நாட்டு மக்களால் நடமாடும் தெய்வமாகவே கருதிப் போற்றப்படுவான்.

• முறை செய்து = சாதி, மத, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றிச் சட்டப்படி நடுநிலையோடு நீதி வழங்கி,• காப்பாற்றும் மன்னவன் = தன் குடிமக்களைக் கொடுமைகளிலிருந்து கண்ணும் கருத்துமாகக் காக்கின்ற அரசன்,• மக்கட்கு = தன் நாட்டு மக்களுக்கு,• இறை என்று = நடமாடும் 'தெய்வமே' என்று• வைக்கப்படும் = தனித்து உயர்த்தி வைத்து வணங்கப்படுவான்.

மு.வரதராசன்

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

பரிமேலழகர்

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)

சாலமன் பாப்பையா

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

Meaning in English

Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout