Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 382

பொருட்பால்அரசியல்39. இறைமாட்சி

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

anjsAmai Ikai aRivUkkam innAnkumenjsAmai vEntaR kiyalpu

Fr. Jegath Gaspar Raj

பொருள் / உரை

முருகா எளிய உரை

துணிச்சல், வாரி வழங்கும் கொடைத்தன்மை, கூரிய அறிவு, தளராத மன ஊக்கம் ஆகிய நான்கு தலைசிறந்த குணங்களும் குறைவின்றி நிறைந்து இருப்பதே நாட்டை ஆளும் ஒரு தலைவனுக்குரிய இயல்பான பண்பாகும்.

• அஞ்சாமை = துன்பங்களுக்கும் பகைவர்க்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சம்,• ஈகை = ஏழை எளியோர்க்கும் வீரர்க்கும் வாரி வழங்கும் கொடைத்தன்மை,• அறிவு = நாட்டை வழிநடத்தும் கூரிய நிர்வாக அறிவுடைமை,• ஊக்கம் = சோர்ந்து போகாமல் எப்போதும் செயலாற்றும் மன ஊக்கம்• இந்நான்கும் எஞ்சாமை = ஆகிய இந்த நான்கு நற்குணங்களும் குறையாமல் எப்போதும் நிலைத்து நிற்பதே,• வேந்தற்கு இயல்பு = ஒரு சிறந்த அரசனுக்குரிய இயற்கை குணமாகும்.

மு.வரதராசன்

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

பரிமேலழகர்

வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)

சாலமன் பாப்பையா

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

Meaning in English

Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout