Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 381

பொருட்பால்அரசியல்39. இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.

paTaikuTi kUzhamaissu naTparaN ARumuTaiyAn arasaru LERu

Sharath Matthew

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• படை = வீரம் மிக்க படைபலம்,• குடி = அன்பு மிக்க நாட்டு மக்கள் (நாடு),• கூழ் = குறையாத உணவுப் பொருளும் நிதிச் செல்வமும் (கருவூலம்),• அமைச்சு = விவேகமுள்ள நல்ல அமைச்சர்கள்,• நட்பு = ஆபத்தில் கை கொடுக்கும் நல்ல நட்பு நாடுகள்,• அரண் = எதிரிகளால் தகர்க்க முடியாத பாதுகாப்புக் கோட்டை• ஆறும் உடையான் = ஆகிய இந்த ஆறு அங்கங்களையும் குறைவின்றிப் பெற்றுள்ள அரசனே,• அரசருள் ஏறு = உலக அரசர்களுக்கெல்லாம் ஆண் சிங்கம் போன்ற தலைசிறந்த அரசன் ஆவான்.எளிய விளக்கம்:வீரமான படை, நாட்டு மக்கள், கருவூலச் செல்வம், சிறந்த அமைச்சர், நல்ல நட்பு, பாதுகாப்பான அரண் ஆகிய ஆறு அங்கங்களையும் குறைவின்றிப் பெற்றுள்ள ஆட்சியாளனே, உலக அரசர்களிலேயே ஆண் சிங்கம் போன்ற கம்பீரமான தலைவன் ஆவான்.

மு.வரதராசன்

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

பரிமேலழகர்

படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம்.வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

Meaning in English

An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout