Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 377

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

vakuttAn vakutta vakaiyallAR kOTitokuttArkkun tuytta laritu

Maalavika Sundar

பொருள் / உரை

முருகா எளிய உரை

முயன்று கோடிக்கணக்கான செல்வங்களைச் சேர்த்து வைத்திருந்தாலும், அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப இறைவன் விதித்த அளவின்படி மட்டுமே அதை அனுபவிக்க முடியுமே தவிர, தன் இஷ்டப்படி அனுபவித்து மகிழ முடியாது.

• கோடி தொகுத்தார்க்கும் = கடினமாக முயன்று பல கோடிக்கணக்கான செல்வங்களைச் சேர்த்து வைத்திருப்பவர்க்கும் கூட,• வகுத்தான் = அவரவர் முற்பிறவி வினைப்பயனுக்கு ஏற்ப வகுத்துத் தரும் இறைவன் (ஊழ் விதி)• வகுத்த வகையல்லால் = நியமித்த அளவின்படி அன்றி,• துய்த்தல் அரிது = தம் விருப்பப்படி அந்தச் செல்வத்தை அனுபவித்து மகிழ்வது இயலாத ஒன்றாகும்.

மு.வரதராசன்

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

பரிமேலழகர்

கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)

சாலமன் பாப்பையா

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

Meaning in English

Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout