பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.
pariyinum AkAvAm pAlalla uyttussoriyinum pOkA tama
Abishek
பொருள் / உரை
முருகா எளிய உரை
விதியினால் தமக்கு உரிமையில்லாத பொருள்கள் எவ்வளவு கண்ணும் கருத்துமாகக் காத்தாலும் நிலைக்காமல் போய்விடும்; விதியினால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டுபோய் வீசினாலும் கூட தம்மை விட்டு விலகிப் போகாது.
• பால் அல்ல = ஊழ்வினைப் பயனால் தமக்கு உரிமை இல்லாத பொருள்கள்,• பரியினும் ஆகாவாம் = எவ்வளவு வருந்திப் பாதுகாத்தாலும் தம்மிடம் நிலைத்து நிற்காமல் அழிந்துபோகும்;• தம = மாறாக ஊழால் தமக்குரியதாக விதிக்கப்பட்ட பொருள்களோ,• உய்த்துச் சொரியினும் = தாமே வலிய வெளியே கொண்டு போய்க் கொட்டி வீசினாலும் கூட• போகா = தம்மைக் கைவிட்டு விலகிப் போகாது (மீண்டும் தமக்கே வந்து சேரும்).
மு.வரதராசன்
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
பரிமேலழகர்
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
Meaning in English
Things not your own will yield no good, howe'er you guard with pain; Your own, howe'er you scatter them abroad, will yours remain





