Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 375

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.

nallavai yellAan tIyavAn tIyavumnallavAnj selvanj seyaRku

Vasudevan Subramaniam

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வத்தை ஈட்ட முயலும் போது, இழப்புக்குரிய விதியிருந்தால் சாதகமான நல்ல சூழ்நிலைகளும் கூட நஷ்டத்தைத் தரும் தீமையாக மாறும்; செல்வம் பெருகும் நல்விதியிருந்தால் சாதகமற்ற சூழ்நிலைகளும் கூட லாபத்தைத் தரும் நன்மையாக மாறும்.

• செல்வம் செயற்கு = ஒருவன் செல்வத்தை ஈட்டிப் பெருக்குவதற்கு முயலும் போது,• நல்லவை எல்லாம் = நல்ல காலம், சிறந்த இடம், சரியான திட்டங்கள் என அமைந்த நன்மையான சூழ்நிலைகளும் கூட• தீயவாம் = இழப்புக்குரிய விதியினால் கேடாய் முடிந்து நஷ்டத்தைத் தரும்;• தீயவும் = மாறாகச் சாதகமற்ற சூழல்களும், தவறான முடிவுகளும் கூட• நல்லவாம் = ஆக்கத்திற்குரிய நல்விதியினால் லாபகரமாக மாறி வெற்றியைத் தரும்.

மு.வரதராசன்

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

பரிமேலழகர்

செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

சாலமன் பாப்பையா

நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

Meaning in English

All things that good appear will oft have ill success; All evil things prove good for gain of happiness

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout