Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 373

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.

nuNNiya nUlpala kaRpinum maRRuntanuNmai yaRivE mikum

Sruthy Sreejith

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவ்வளவு நுட்பமான தத்துவ நூல்களை ஒருவர் கற்றிருந்தாலும், முடிவெடுக்கும் நேரத்தில் அவரது ஊழ்வினைப் பயனால் ஏற்படும் இயல்பான விதியின் அறிவே மேலோங்கி நிற்கும்.

• நுண்ணிய நூல் பல கற்பினும் = மிக நுட்பமான அறிவை ஊட்டக்கூடிய பல சிறந்த சாஸ்திர நூல்களை ஒருவன் கற்றிருந்த போதிலும்,• மற்றும் = முடிவெடுக்கும் முக்கியமான நேரத்தில்,• தன் உண்மை அறிவே மிகும் = அவனது ஊழ்வினைப் பயனால் உண்டான இயல்பான அறிவே (விதிக்குரிய அறிவே) மேலோங்கி நிற்கும்.

மு.வரதராசன்

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

பரிமேலழகர்

நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)

Meaning in English

In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout