Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 372

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.

pEtaip paTukkum izhavUzh aRivakaRRumAkalU zhuRRak kaTai

Ragasudha Balasubramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வ இழப்புக்குரிய தீவிதி வரும் போது சிறந்த அறிவாளியின் புத்தியும் மழுங்கிப் பேதைமையாகிவிடும்; செல்வம் சேருவதற்குரிய நல்விதி கூடிவரும் போதோ சாதாரண மனிதனின் அறிவும் விரிவடைந்து சிறந்து விளங்கும்.

• இழவு ஊழ் = செல்வத்தை இழப்பதற்குக் காரணமான தீவிதி வந்து சேரும் போது,• அறிவு பேதைப் படுக்கும் = எப்பேர்ப்பட்ட கூரிய அறிவுடைய மனிதனின் புத்தியையும் அது பேதைமையாக்கி மழுங்கச் செய்யும்;• ஆகல் ஊழ் உற்றக்கடை = செல்வம் பெருகக்கூடிய நல்விதி வந்து சேரும் போதோ,• அறிவு அகற்றும் = எளிய மனிதனின் அறிவையும் அது பல மடங்கு விரிவடையச் செய்து உயர்த்தும்.

மு.வரதராசன்

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

பரிமேலழகர்

இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Meaning in English

The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom bless

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout