அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.
anjsuva tOrum aRanE oruvanaivanjsippa tOrum avA
Bala Thripura Sundari
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆன்ம சாதகனை அவனறியாமல் ஏமாற்றி வீழ்த்தி அழிப்பது உலகப் பேராசையே ஆகும்; எனவே அந்த ஆபத்தான ஆசை தன் நெஞ்சில் நுழையாதவாறு அஞ்சி எப்போதும் எச்சரிக்கையோடு வாழ்வதே தலைசிறந்த அறமாகும்.
• ஒருவனை வஞ்சிப்பது அவா = ஆன்மீகப் பாதையில் முன்னேறும் ஒரு மனிதனை அவனறியாமல் ஏமாற்றி வீழ்த்தி அழிப்பது அவனது உள்ளத்து ஆசையே ஆகும்;• அஞ்சுவது ஓரும் = அதனால் அந்த ஆபத்தான ஆசை தன் நெஞ்சில் தலைதூக்காதவாறு அஞ்சி எச்சரிக்கையோடு காப்பதே• அறனே = ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தலைசிறந்த அறமாகும்.
மு.வரதராசன்
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
பரிமேலழகர்
ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது. (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான்.அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.
Meaning in English
Desire each soul beguiles; True virtue dreads its wiles





