Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 36

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.

anRaRivAm ennA taRanjseyka maRRatuponRungkAl ponRAt tuNai

Vel Murugan

பொருள் / உரை

முருகா எளிய உரை

என்றும் நாளைக் காத்து நேரம் தாழ்த்த மாட்டோமே!இன்றே நாம் அறம் செய்யத் தவற மாட்டோமே!உடல் அழியும் போதில் அறமே காக்குமே!அழியாத் துணையாய் என்றென்றும் இருக்குமே!

• அன்று அறிவாம் என்னாது = 'முதுமை வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று காலத்தைத் தள்ளிப்போடாமல்,• அறம் செய்க = இப்போதிருந்தே நல்ல தர்மங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்;• மற்று அது = நாம் செய்யும் அந்த அறமானது,• பொன்றுங்கால் = நம் வாழ்வின் முடிவில் உடல் அழியும் காலத்திலும் கூட• பொன்றாத் துணை = அழியாத உற்ற துணையாக நின்று நம்மைக் காக்கும்.

மு.வரதராசன்

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

பரிமேலழகர்

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Meaning in English

Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout