Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 357

அறத்துப்பால்துறவறவியல்36. மெய்யுணர்தல்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

OrttuLLam uLLa tuNarin orutalaiyAppErttuLLa vENTA piRappu

Acshayaa Shan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதன் தன் உள்ளத்தில் நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து, எக்காலத்தும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்துவிட்டால், அவனுக்கு மீண்டும் ஒரு மறுபிறவி உண்டாகும் என்று நினைக்கத் தேவையில்லை; பிறவிப் பிணி நீங்கி அவன் முக்தி அடைவான்.

• உள்ளம் ஓர்த்து = ஒரு மனிதனின் உள்ளமானது ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்து,• உள்ளது உணரின் = எக்காலத்தும் அழியாமல் உள்ள மெய்ப்பொருளைத் தெளிவாக உணருமானால்,• ஒருதலையா = நிச்சயமாக,• பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா = அவனுக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டாகும் என்று நினைக்க வேண்டியதில்லை (மறுபிறவி அடியோடு ஒழிந்து முக்தி கிட்டும்).

மு.வரதராசன்

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

பரிமேலழகர்

உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

Meaning in English

The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout