Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 356

அறத்துப்பால்துறவறவியல்36. மெய்யுணர்தல்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

kaRRINTu meypporuL kaNTAr talaippaTuvarmaRRINTu vArA neRi

Savitha Sai

பொருள் / உரை

முருகா எளிய உரை

இந்த அரிய மனிதப் பிறவியிலேயே மெய்ந்நூல்களைக் கற்று, பரம்பொருளாகிய மெய்ப்பொருளை உணர்ந்த சான்றோர்கள், மீண்டும் இப்பூவுலகில் வந்து பிறக்காத மேலான முக்தி நெறியை அடைவார்கள்.

• ஈண்டுக் கற்று = இந்த அரிய மானிடப் பிறவியிலேயே குருவின் உபதேசங்களைக் கேட்டு முறைப்படி கற்று,• மெய்ப்பொருள் கண்டார் = பரம்பொருளாகிய மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் உணர்ந்த ஞானிகள்,• மற்று ஈண்டு வாரா நெறி = மீண்டும் இந்தத் துன்பப் பூவுலகில் வந்து பிறக்காத முக்தி நெறியை• தலைப்படுவர் = உறுதியாக அடைந்து பேரின்பம் பெறுவர்.

மு.வரதராசன்

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

பரிமேலழகர்

ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

Meaning in English

Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout