Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 355

அறத்துப்பால்துறவறவியல்36. மெய்யுணர்தல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.

epporu Lettanmait tAyinum apporuLmeypporuL kANpa taRivu

T. L. Maharajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எந்தவொரு பொருளும் வெளித்தோற்றத்தில் எத்தகைய தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், அந்த மாயைத் தோற்றத்தில் மயங்காமல் அதனுள் மறைந்திருக்கும் உண்மையான தத்துவ மெய்ப்பொருளைக் காண்பதே தலைசிறந்த மெய்ஞான அறிவாகும்.

• எப்பொருள் = எந்தவொரு உலகப் பொருளும் அல்லது உயிரும்• எத்தன்மைத்து ஆயினும் = வெளித்தோற்றத்தில் எத்தகைய வடிவம், பெயர், குணம் கொண்டதாகத் தோன்றிய போதிலும்,• அப்பொருள் = அந்தப் பொருளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து மயங்கிவிடாமல்,• மெய்ப்பொருள் காண்பது = அதனுள் நிலைத்து நிற்கும் உண்மையான தத்துவ மெய்ப்பொருளைக் கண்டறிவதே• அறிவு = மெய்யான ஆத்ம ஞான அறிவாகும்.

மு.வரதராசன்

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

பரிமேலழகர்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால் , காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான்,இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினதுஇலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Meaning in English

Whatever thing, of whatsoever kind it be, 'Tis wisdom's part in each the very thing to see

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout