ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
aiyuNar veytiyak kaNNum payaminREmeyyuNar villA tavarkku
Aarabhi Shankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஐம்புலன்களையும் அடக்கும் யோக ஆற்றலைப் பெற்றிருந்தாலும் கூட, பரம்பொருளை உணரும் உண்மையான மெய்ஞானம் இல்லாதவர்களுக்கு அந்த புலனடக்கத்தால் ஆன்ம முக்திக்கு எந்தப் பயனும் இல்லை.
• ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கி மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்த போதிலும்,• மெய்யுணர்வு இல்லாதவர்க்கு = பரம்பொருளாகிய மெய்ப்பொருளை உணரும் ஆத்ம ஞானம் இல்லாத மனிதர்களுக்கு,• பயம் இன்றே = அந்த புலனடக்க ஆற்றலால் எந்தவொரு ஆன்மீகப் பயனும் உண்டாகாது.
Murugaa simple commentary
Even if one has obtained the yogic power to control the five senses, for those who lack the true spiritual wisdom to realize the Supreme Being, there is no benefit for the liberation of the soul from that sense control.
• Even though having attained perception of the five senses = Even though having obtained the power to subdue the five sense organs of body, mouth, eye, nose, and ear and focus the mind,• To those who lack true knowledge = To human beings who do not possess the spiritual wisdom to realize the true reality that is the Supreme Being,• There is indeed no benefit = No spiritual benefit whatsoever will arise from that power of sense control.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
பரிமேலழகர்
ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)
Parimelazhagar
Even when the fivefold consciousness is attained, there is no benefit, even when the consciousness, which becomes fivefold due to the difference of the spoken of sense objects, leaves them and comes under one's own control, there is indeed no benefit from that, for those who do not have knowledge of the truth, for those who do not have realization of the truth. (The consciousness that becomes fivefold: the mind, attaining it means turning back, becoming one pointed, and standing in concentration. Because even when it stands thus it does not yield liberation, he said 'there is no benefit'. The special particle 'um' stood illustrating the difficulty of attaining it. By these two verses, the excellence of knowledge of the truth was stated, that liberation exists only for those who possess knowledge of the truth.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
Meaning in English
Five-fold perception gained, what benefits accrue To them whose spirits lack perception of the true

