Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 352

அறத்துப்பால்துறவறவியல்36. மெய்யுணர்தல்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.

iruLnIngki inpam payakkum maruLnIngkimAsaRu kATsi yavarkku

Rajeswari Swaminathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறியாமை என்னும் மயக்கத்திலிருந்து விடுபட்டுக் குற்றமற்ற தூய மெய்ஞானக் காட்சியைப் பெற்ற ஞானிகளுக்கு, பிறவித் துன்பம் என்னும் இருள் அகன்று, எக்காலத்தும் அழியாத முக்திப் பேரின்பம் உண்டாகும்.

• மருள் நீங்கி = அறியாமை மயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு,• மாசு அறு காட்சியவர்க்கு = குற்றமற்ற தூய மெய்ஞானக் காட்சியைப் பெற்ற ஞானிகளுக்கு,• இருள் நீங்கி = பிறவித் துன்பம் என்னும் இருள் விலகி,• இன்பம் பயக்கும் = எக்காலத்தும் அழியாத முக்திப் பேரின்ப நிலை உண்டாகும்.

மு.வரதராசன்

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

பரிமேலழகர்

மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

Meaning in English

Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion free

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout