Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 350

அறத்துப்பால்துறவறவியல்35. துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.

paRRuka paRRaRRAn paRRinai appaRRaippaRRuka paRRu viTaRku

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

எந்தப் பற்றும் இல்லாத முழுமுதல் இறைவனின் திருவடி அன்பை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்; உலக மாயைப் பற்றுகளை அடியோடு விட்டொழிப்பதற்காகவே அந்த ஒப்பற்ற இறைப் பற்றை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.

• பற்று அற்றான் பற்றினை = எதன் மீதும் எந்தவித ஆசையும் பற்றும் இல்லாத முழுமுதல் இறைவனின் திருவடிப் பற்றை• பற்றுக = ஒருவன் தன் நெஞ்சார உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்;• அப்பற்றை = அந்த தெய்வீக பற்றை• பற்று விடற்கு = மனிதன் மற்ற உலக ஆசைகளையும் மாயைப் பற்றுகளையும் விட்டொழிப்பதற்காகவே• பற்றுக = பற்றிக்கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

பரிமேலழகர்

பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

Meaning in English

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout