Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 347

அறத்துப்பால்துறவறவியல்35. துறவு

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.

paRRi viTAa iTumpaikaL paRRinaippaRRi viTAa tavarkku

George Bharani

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகப் பற்றுகளையும் ஆசைகளையும் விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களை, வாழ்க்கைத் துன்பங்களும் மனக்கவலைகளும் அவர்களை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒருபோதும் நீங்காது.

• பற்றினைப் பற்றி விடாதவர்க்கு = 'நான்', 'எனது' என்கின்ற உலக ஆசைகளையும் பற்றுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு விடாத மனிதர்களை,• இடும்பைகள் = பிறவித் துன்பங்களும், மனக்கவலைகளும்• பற்றி விடா = அவர்களை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் நீங்காது.

மு.வரதராசன்

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

பரிமேலழகர்

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

Meaning in English

Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout