அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
aTalvENTum aintan pulattai viTalvENTumvENTiya vellAm orungku
V. K. Manimaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஐம்பொறிகளின் வழியே எழும் சிற்றின்ப ஆசைகளை மனவலிமையோடு வென்று அடக்க வேண்டும்; அவ்வாறு அடக்குவதற்கு அப்புலன்கள் விரும்புகின்ற உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே சேர முழுமையாகத் துறந்துவிட வேண்டும்.
• ஐந்தன் புலத்தை = மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியே எழும் ஆசைகளை• அடல் வேண்டும் = மனவலிமையோடு வென்று அடக்க வேண்டும்;• வேண்டிய எல்லாம் = அவ்வைந்து புலன்களும் நுகர விரும்புகின்ற உலகப் பொருட்கள் அனைத்தையும்• ஒருங்கு விடல் வேண்டும் = ஒரே நேரத்தில் முழுமையாகத் துறந்துவிட வேண்டும்.
Murugaa simple commentary
One must conquer and subdue with mental strength the sensual desires that arise through the five sense organs; in order to subdue them in that manner, one must completely renounce all at once all the worldly things that those senses desire.
• The realm of the five senses = The desires that arise through the five sense organs, namely body, mouth, eye, nose, and ear• Must conquer and subdue = Must conquer and subdue with mental strength;• All that is desired = All the worldly things that those five senses desire to experience• Must renounce all at once = Must completely renounce at the same time.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
பரிமேலழகர்
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)
Parimelazhagar
One must destroy the perceptions of the five, for those who would attain liberation must destroy the five sense objects, beginning with sound, which belong to the five sense organs, beginning with the ear. One must altogether renounce everything desired, when destroying them, one must altogether renounce the entirety of the wealth one has acquired for the sake of enjoying them. (Here, perception means the enjoyment of them. Because it directs the mind only toward things that do not come except through suffering and sin, and does not direct it toward yoga and wisdom which are the path to liberation, he said 'one must destroy it', and because if it goes toward those things, that enjoyment grows fierce like a fire that has received firewood and cannot be destroyed, he said 'one must altogether renounce everything desired'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
Meaning in English
'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire

