Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 340

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு.

pukki lamaintinRu kollO uTampinuLtussi lirunta uyirkku

Uma Iyer

பொருள் / உரை

முருகா எளிய உரை

அழியக்கூடிய இந்த உடலுக்குள் ஒரு வாடகை வீட்டில் ஒதுங்குவது போலத் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் ஆன்மாவிற்கு, எப்போதும் நிலைத்து வாழக்கூடிய நிரந்தரமான சொந்த வீடு (முக்தி) இன்னும் அமையவில்லையோ என்னவோ! (எனவே முக்தி வீட்டை அடைய ஆன்ம ஞானத்தைப் பெறுக).

• உடம்பினுள் = நோய்களும் அழுகலும் கொண்ட இந்த மனித உடம்பிற்குள்• துச்சில் இருந்த உயிர்க்கு = தற்காலிகமாக ஒதுங்கித் தங்கியிருக்கும் இந்த ஆன்மாவிற்கு,• புக்கில் அமைந்தின்று கொல்லோ = எக்காலத்தும் நிலைத்து வாழக்கூடிய நிரந்தரமான சொந்த வீடு (முக்தி வீடு) இதுவரை அமையவில்லையோ? (அதனால்தான் உடம்புகளை மாற்றிக்கொண்டே அலைகிறது).

மு.வரதராசன்

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

பரிமேலழகர்

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால்,

சாலமன் பாப்பையா

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!

Meaning in English

The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout