Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 34

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற.

manattukkaN mAsilan Atal anaittaRanAkula nIra piRa

Padmalatha

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே!அதுவே முழுமையான அறம் ஆவதே!பிற செயல் எல்லாம் வெறும் ஆரவாரமே!பிற வேடம் எல்லாம் வெறும் ஆடம்பரமே!

• மனத்துக்கண் = தன் உள்ளத்தில் எந்தவிதமான• மாசு இலன் ஆதல் = குற்றமும் தீய எண்ணமும் இல்லாத தூயவனாக இருப்பதே• அனைத்து அறன் = அறம் எனப்படும் முழுமையான தர்மமாகும்;• பிற = மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் மற்ற வெளிவேடங்கள் எல்லாம்• ஆகுல நீர = வெறும் வெற்று ஆரவாரமும் ஆடம்பரமுமே அன்றி வேறில்லை.

மு.வரதராசன்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

பரிமேலழகர்

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய;(குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Meaning in English

Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout